மண்டல் கமிஷன் பரிந்துரைகளை முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் கிடப்பில் போட்டதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் குற்றம்சாட்டினார்.
மும்பையில் ஜூனியர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அம்பேத்கருக்கு 1990-ஆம் ஆண்டு மார்ச் 31-இல் இறப்புக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கியபோது தாம் மக்களவை உறுப்பினராக இருந்ததை நினைவுகூர்ந்தார்.
சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மண்டல் கமிஷன் அறிக்கை வெளியாகி 10 ஆண்டுகளான போதிலும், அதை முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் கிடப்பில் போட்டதாக ஜகதீப் தன்கர் குற்றம்சாட்டினார்.
மேலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் 1990-ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட போது தாம் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்த வகையில் அம்பேத்கரின் வாழ்வுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய நிகழ்வுகளில் தாம் அங்கம் வகிப்பது பெருமையளிப்பதாக ஜகதீப் தன்கர் கூறினார்.