மாணவர்கள் தேவைக்கு மட்டும் செல்போனை பயன்படுத்திக் கொண்டு, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே சங்கரா நர்சிங் கல்லூரி துவக்க விழா நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
பின்னர், மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், 2014 -ம் ஆண்டில் நாடு முழுவதும் 380 கல்லூரிகள் இருந்த நிலையில், தற்போது 730 மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக தெரிவித்தார். “இதன் மூலம் வருடத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் மருத்துவம் பயின்று வெளியே செல்வதாக அவர் கூறினார்.
மாணவர்கள் வெளியே சாப்பிடாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடவேண்டும் எனவும், “தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது தியானம் செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சங்கரா பல்கலைக்கழக தாளாளர் மற்றும் டிசிஎஸ் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.