குஜராத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடி ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜார்க்கண்ட் சென்ற அவர் 6 புதிய வந்தே பாரத் ரயில்கள் சேவையை தொடங்கி வைத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
அதனைத்தொடர்ந்து குஜராத்துக்கு சென்றுள்ள பிரதமர், காந்திநகர் மற்றும் அகமதாபாத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிசக்தி, சாலைகள், வீட்டு வசதி துறை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.