புதுச்சேரி சிறை கழிவறையில் தூக்கிட்ட நிலையில் கைதியின் உடல் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
முத்தியால்பேட்டையில் கடந்த மார்ச் 2-ம் தேதியன்று 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன், கருணாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குளிர் அடிப்பதாக கூறி சிறை காவலரிடம் துண்டு வாங்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது