பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தானியங்களை கொண்டு அவரது உருவத்தை உருவாக்கிய மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பிரதமர் மோடியின் பிறந்த நாள் நாடு முழுவதும் நாளை உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 13 வயது மாணவி பிரெஸ்லி ஷெகினா என்பவர் பிரதமர் மோடியின் உருவத்தை தானியங்களை கொண்டு உருவாக்கி அசத்தியுள்ளார்.
பிரதமர் மோடியின் உருவத்தை 12 மணி நேரமாக வரைந்து சாதனை படைத்துள்ள மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.