பிரதமர் மோடியின் 3.O இந்த நூற்றாண்டுக்கான தொலைநோக்கு பார்வையை கட்டமைக்கும் என அமெரிக்க – இந்திய கூட்டாண்மை பேரமைப்பு தலைவர் ஜான் சேம்பர்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவார் என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான இந்தியா, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என குறிப்பிட்டார். அமெரிக்க – இந்திய கூட்டாண்மை பயணத்தில் AI, சைபர் பாதுகாப்பு மற்றும் செமிகண்டக்டர் துறை முக்கியத்துவம் பெறும் என்றும், பிரதமர் மோடியின் 3.O இந்த நூற்றாண்டுக்கான தொலைநோக்கு பார்வையை கட்டமைக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், நூற்றாண்டின் இறுதியில் இந்தியப் பொருளாதாரம் சீனாவை விட 90 முதல் 100 சதவீதம் பெரியதாக இருக்கும் என்றும், அமெரிக்காவை விட இந்தியாவின் பொருளாதாரம் 30 முதல் 40 சதவீதம் அதிகரித்து காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.