சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
காளையார்கோவிலில் இருந்து சிவகங்கை நோக்கி சென்றுக்கொண்டிருந்த சொகுசு காரில் மூன்று இளைஞர்கள் பயணம் செய்தனர். கொல்லங்குடி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், மென்பொருள் ஊழியர்களான கலாநிதி, கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட லோகேஷ் என்பவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.