டெல்லி முதல்வர் பதவியைப் பிடிப்பதற்கு ஆம் ஆத்மி கட்சியினரிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பதவி விலக போவதாக அறிவித்துள்ளார்.
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள சூழலில், வெறும் ஆறு மாதமாவது முதல்வர் பதவியை வகித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அந்த வகையில், மூத்த அமைச்சர்கள் அதிஷி, கைலாஷ் கெலாட், செளரவ் பரத்வாஜ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ராகவ் சத்தா, சஞ்சய் சிங் ஆகியோர் போட்டியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கல்வி மற்றும் பொதுப் பணித்துறையை தன்வசம் வைத்திருக்கும் அதிஷிக்கும், நிதியமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.