வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கத்திலும், வரும் 27-ம் தேதி கான்பூரிலும் இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதல் டி20 போட்டி அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. வங்கதேசத்தைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.
இதன் காரணமாகவே வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.