இந்திய அணிக்கு திரும்ப கடுமையாக முயற்சித்து வருகிறேன் என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முகமது சமி தனது உடல்தகுதி குறித்து பேசியுள்ளார்.
அதில், தான் அணிக்கு திரும்பும் போது, உடல் அளவில் எந்த வித அசவுகரியமும் இன்றி இருப்பதை உறுதிப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், தான் எவ்வளவு வலிமையாக திரும்புகிறேனோ, அது தனக்கு நல்லது எனவும் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
















