ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஹாக்கி இறுதி போட்டியில் இந்தியா, சீனா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இறுதி போட்டி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கு முன் இரு அணிகள் மோதிய 23 போட்டியில் இந்தியா 17 ஆடடங்க்ளில் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.
3 போட்டியில் சீனா வெல்ல, 3 போட்டி ‘டிரா’ ஆனது. ஆசிய சாம்பியன்ஸ் தொடரில் இரு அணிகளும் 6 முறை மோதின. இதில் இந்தியா 5 போட்டியில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் சீனா வென்றது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா 6வது முறையாக முன்னேறியது குறிப்பிடத்தக்கது.