சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
அந்தமான் நிகோபர் தீவுகளில் மத்திய அரசு மேற்கொள்ளும் கிரேட் நிக்கோபர் திட்டம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல்சார் வணித்துறையில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுக்கும் நோக்கில் இந்த திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இந்நிலையில், அந்தமான் நிக்கோபர் வளர்ச்சி திட்டத்தை காங்கிரஸ் எதிர்த்து வருவதாகவும், நாட்டின் வளர்ச்சியை அக்கட்சி முடக்குவதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
















