சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தை விசாரிக்க சென்ற எஸ்.எஸ்.ஐ., தாக்கப்பட்டார்.
சேலத்திலிருந்து கருமந்துரை நோக்கி சென்ற தனியார் பேருந்தை ஜெகதீசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். வெள்ளப்பட்டி பகுதியில் அதிகவேகமாக சென்ற பேருந்தை மெதுவாக இயக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.
இதில், ஓட்டுநருக்கும், வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை விசாரணைக்கு சென்ற எஸ்.எஸ்.ஐ வளவனை சிலர் தாக்கியதால் அவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.
இதனை தொடர்ந்து வாழப்பாடி டிஎஸ்பி ஆனந்த் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். தாக்குதலில் காயமடைந்த ஓட்டுநர், நடத்துநர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.