உதகை அருகே சாலையில் உலா வரும் புலியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
55 சதவீத வனப்பகுதியை கொண்டுள்ள நீலகிரியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக காணப்படுகின்றன.
இந்நிலையில் போர்த்திமந்து பகுதியில் உள்ள சாலையில் நடந்துசென்ற புலியை கண்ட வாகன ஓட்டிகள், அதனை செல்போனில் பதிவுசெய்த நிலையில் இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
புலியின் நடமாட்டத்தால் அச்சமடைந்த மக்கள் கூண்டு அமைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.