உதகையில், 150 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் கும்பாபஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
உதகை ஃபர்ன்ஹில்லில் அமைந்துள்ள இந்த கோயிலில், யாகசாலை பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. தொடர்ந்து, திருக்குடங்களில் எடுத்துச் செல்லப்பட்ட புனித நீர், ராஜகோபுரம், உள்ளிட்ட கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, விநாயகர், முருகர், அம்பாள், சிவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில், தோடர் பழங்குடியின மக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்று பவானீஸ்வரரை வழிபட்டனர்.