திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் ஒரே ஒரு மருத்துவர் இருந்ததால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைபெற்று வரும் நிலையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.