ஆஸ்திரியா, போலந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட மத்திய ஐரோப்பிய நாடுகள் கனமழையால், கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கு என கூறப்படுகிறது. அதிகாரிகள் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட தொடங்கியுள்ளனர்.