ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் மூலம் குளங்களில் தண்ணீர் நிரப்ப வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புங்கம்பள்ளி, காராப்பாடி, மாதம்பாளையம், நல்லூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரப்ப வலியுறுத்தி புங்கம்பள்ளி குளம் அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கிராமங்களில் உள்ள குளங்கள் வறண்டு காணப்படுவதால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.