உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், உஷா உதுப்புடன் இணைந்து பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் தனியார் ஊடக நிறுவனம் நடத்திய நிகழ்வொன்றில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அந்நிகழ்வை பாடகி உஷா உதுப் வழிநடத்தினார்.
அப்போது தன்னுடன் சேர்ந்து பாடுமாறு உஷா உதுப் விளையாட்டாக டி.ஒய்,சந்திரசூட்-யிடம் கேட்டார்.
இதனை ஏற்ற சந்திரசூட், கடந்த 1966-ம் ஆண்டு வெளியான சம்மர் ஒயின் எனும் பாடலை உஷா உதுப்புடன் இணைந்து பாடினார். இது அங்கிருந்த பார்வையாளர்களிடம் கைத்தட்டல்களைப் பெற்றன.