கிர்கிஸ்தானின் கிர்கிஸ் மலைகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால் கடலோர பகுதியில் வசிக்கும் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகும் என ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன.
அந்த வகையில், கிர்கிஸ்தானில் உள்ள கிர்கிஸ் மலைப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 14 முதல் 30 சதவீதம் பனிப்பாறைகள் கடந்த 60 ஆண்டுகளில் உருகியுள்ளதாகவும் ஆய்வாளர்கள்கூறியுள்ளனர்.