அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசும், டிரம்பும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே மிச்சிகனில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது பேசிய குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப், பிரதமர் மோடி அற்புதமானவர் என்றும், இம்மாதம் 21-ம் தேதி அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளும் அவரை சந்திக்க உள்ளதாக கூறினார்.