அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை, துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது டிரம்பிடம் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கமலா ஹாரிஸ் கேட்டறிந்ததாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டொனால்ட் டிரம்பின் பாதுகாப்பு குறித்தும் கமலா ஹாரிஸ் உரையாடியுள்ளார். அதிபர் தேர்தலில் இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வரும் நிலையில், இவர்களின் உரையாடல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.