பிரதமர் மோடியை நேரில் சந்திக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 20ஆம் தேதி நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி வரும் 21ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்ல உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே அவரை சந்தித்து தமிழக நலன் சார்ந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் உடனான சந்திப்பின்போது புதிய கல்விக் கொள்கை திட்டம், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, மேகதாது அணை விவகாரம், மீனவர்கள் கைது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் அலுவலகத்திலிருந்து அதற்கான ஒப்புதல் கிடைத்துடன் முதலமைச்சர் டெல்லி செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது.