மாஞ்சோலை தேயிலை தோட்ட நிர்வாகத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் வழங்கியுள்ளது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமைகள் ஆணைய பொறுப்பு தலைவர் மற்றும் ஆணையத்தின் நீதிபதி விஜயா பாரதி சயானியை கடந்த 20-ம் தேதி நேரில் சந்தித்து மனு அளித்தார். இதையடுத்து மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவின் தலைமை இயக்குநர் அடங்கிய அதிகாரிகளை கொண்ட குழுவை நியமித்தது.
இந்நிலையில், மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய டிஎஸ்பி ரவி சிங், ஆய்வாளர் யோகிந்தர குமார் திருபாதி அடங்கிய குழுவினர் தனது 4 நாட்கள் விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே மாஞ்சோலை தேயிலை தோட்ட நிர்வாகத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் வழங்கியுள்ளது. மேலும், மணிமுத்தாறு சோதனை சாவடி வழியாக மாஞ்சோலை செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.