ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி 3 பெட்டிகள் திருச்சி ரயில் முனையம் அருகே தானாக கழன்று சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற சேது எக்ஸ்பிரஸ், திருச்சி ரயில் முனையத்திலிருந்து அதிகாலை 2.30 மணியளவில் புறப்பட்டது. அப்போது ரயிலின் கடைசி 3 பெட்டிகள் தனியாக கழன்று சென்றன.
இதனையடுத்து உடனடியாக சேது எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே அதிகாரிகள், மீண்டும் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் பெட்டிகள் கழன்று சென்ற சம்பவம் தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.