இஸ்ரேலின் சூப்பர் ஸ்கெட்ச்! : பேஜர்கள் மூலம் குண்டுவெடிப்பு மொசாட் நடத்தியது எப்படி?
Oct 16, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலின் சூப்பர் ஸ்கெட்ச்! : பேஜர்கள் மூலம் குண்டுவெடிப்பு மொசாட் நடத்தியது எப்படி?

Web Desk by Web Desk
Sep 18, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனானிலும், சிரியாவிலும், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், லெபனானுக்கான ஈரான் தூதர் மொஜ்தபா அமானி உட்பட 2800 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் எப்படி இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்பது பற்றி பார்ப்போம்.

கடந்த அக்டோபர் 7ம் தேதி , இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தினர். இதனை தொடர்ந்து, இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியது. இதனையடுத்து, ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து, பேஜர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் பேஜர் குண்டுவெடிப்புக்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் வேகமாக பரவியது.

மளிகைக் கடை காசாளரின் அருகில் ஒரு சிறிய கையடக்க சாதனம் ஒருவர் பணம் செலுத்தும் போது, ​​வெடித்து சிதறுவதையும், சந்தையில் உள்ள ஒரு பழக் கடையில் நின்று கொண்டிருந்த ஒருவர் முன் பேஜர் வெடிப்பதையும், சாலைகள் எங்கும் இரத்தம் கொட்டி உறைந்திருப்பதையும் சிசிடிவி கேமிரா பதிவில் காண முடிகிறது.

முகம் சிதைந்த நிலையிலும்,கைகளில்,கால்களில் காயங்களுடனும் நடைபாதையில் மக்கள் நிலை குலைந்து விழுந்து கிடந்தார்கள் என்றும், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1959ம் ஆண்டில் தான் மோட்டோரோலா வாக்கி-டாக்கி மற்றும் கார் ரேடியோ தொழில்நுட்பத்தில் தனிப்பட்ட ரேடியோ தகவல்தொடர்புகளை உற்பத்தி செய்யத் தொடங்கியபோது ‘பேஜர்’ என்ற வார்த்தையை உருவாக்கியது. 1994ம் ஆண்டில், குறைந்தது 61 மில்லியன் பேஜர்கள் உலகம் முழுவதும் புழக்கத்தில் இருந்தது.

ஸ்மார்ட் போன்கள் வருகைக்குப் பிறகும் மருத்துவமனைகள் போன்ற சில முக்கிய துறைகளில் பேஜர்கள் இன்றும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆறு மாதங்களுக்கு முன், தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உறுப்பினர்களுக்கு, மொபைல் போன்களுக்குப் பதிலாக பேஜர்களைப் பயன்படுத்துமாறு ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லாஹ் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து, காசா போர் தொடங்கிய பின்னர் மொபைல் போன்களைத் தவிர்த்து விட்டு, பேஜர்களையே தங்களுக்கான தொலைதொடர்பு சாதனமாக ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பேஜர்கள் வெடிப்பு, டிஜிட்டல் ஹேக்கிங் முறையில் நடந்திருக்கலாம் என்றும், பேஜர்களில் வெடிபொருட்கள் சேர்க்கப்பட்டு வெடிக்க வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஐந்து மாதங்களுக்கு முன் ஹிஸ்புல்லா அமைப்பு, தங்கள் தேவைகளுக்காக, 5,000 பேஜர்களை வாங்க முடிவெடுத்திருந்தது. தைவானில் உள்ள கோல்ட் அப்பல்லோ நிறுவனத்திடம் இருந்து 5000 AP924 மாடல் பேஜர்களை ஹிஸ்புல்லா அமைப்பு வாங்கியது.

இந்த பேஜர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் இந்த பேஜர்கள் லெபனானுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த பேஜர்களில, சிறிய அளவிலான அதிக ஆற்றல் கொண்ட வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், கோல்ட் அப்பல்லோ நிறுவனர் ஹ்சு சிங்-குவாங், லெபனானில் பேஜர் வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பேஜர்களை தங்கள் நிறுவனம் தயாரிக்கவில்லை என்று மறுத்திருக்கிறார்.

இருப்பினும், பேஜர் வெடிப்பு நடந்த இடங்களில், AP924 மாடல் என அடையாளம் காணப்பட்ட பேஜர்கள், கோல்ட் அப்பல்லோவின் பேஜர்களுடன் ஒத்து போவதாகவும், அந்நிறுவனத்தின் ஸ்டிக்கர் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

லெபனானிலும் சிரியாவிலும் பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட அனைத்து பேஜர்களிலும் வெடிபொருட்களைச் சேர்த்து , ஒரே நேரத்தில் அத்தனை பேஜர்களையும் வெடிக்க வைத்துள்ளனர் என்று இராணுவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பேஜர் வெடிப்பு தாக்குதல் இஸ்ரேலின் கோழைத்தனமான நடவடிக்கை என்று குற்றம் சாட்டி உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கூறியுள்ள லெபனான் அரசு, இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

ஆனால் பேஜர் வெடிப்பு குறித்து,இஸ்ரேல் இராணுவம், அமைதி காத்துவரும் நிலையில், இந்த சம்பவத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கெனவே 1996ம் ஆண்டு முக்கிய ஹமாஸ் தீவிரவாதியை அவரது மொபைல் போனுக்குள் வெடிபொருட்கள் மறைத்து வைத்து கொன்ற சம்பவம் இஸ்ரேலின் உளவு மற்றும் இராணுவத்தின் திறமையை வெளிக்காட்டியது.

இப்போது, ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து நடத்தப் பட்ட பேஜர் குண்டுவெடிப்பு தாக்குதல், உலகில் முதல்முறையாக சர்வதேச நாடுகளின் உளவு அமைப்புக்களையும் சைபர் பாதுகாப்பு நிபுணர்களையும் தலைசுற்ற வைத்திருக்கிறது.

 

Tags: Super sketch from Israel! : How did the Mossad carry out the bombings with pagers?
ShareTweetSendShare
Previous Post

“ரவுடி வாழ்க்கையே லட்சியம்” : சிறைப்பறவையாக இருந்த காக்கா தோப்பு பாலாஜி!

Next Post

மழை வேண்டுமா? வேண்டாமா? : வருகிறது புதிய தொழில்நுட்பம் அசத்தப்போகும் இந்தியா!

Related News

மீரா மிதுன் மீதான பிடிவாரண்ட் ரத்து!

பெருவில் அரசுக்கு எதிராக தொடரும் இளைஞர்கள் போராட்டம்!

புதுச்சேரி : சைபர் க்ரைம் ஆய்வாளர் கீர்த்தி பணியிடை நீக்கம்!

இந்தோனேசியா : வெடித்து சிதறிய லெவொடோபி லகி லகி எரிமலை!

3 குழந்தைகளுடன் உணவு டெலிவரி செய்யும் மலேசிய பெண்!

தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி- பீகார் காங்கிரஸ் பொறுப்பாளர் மீது தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜுக்கு நீதிமன்ற காவல் நிறைவு!

மத்திய பிரதேசம் : மாசடைந்த கிணற்று நீரை பருகிய பலருக்கு உடல் உபாதை!

சபரிமலை, மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல் சாந்திகள் தேர்வு!

ஈரோடு : தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ராஜஸ்தான் : கனரக லாரியும், காரும் மோதிய விபத்தில் 4 பேர் பலி!

தஞ்சாவூர் : 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

கால்பந்து உலக கோப்பை தகுதி சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை!

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை விரிவுபடுத்த ஆப்பிள் நிறுவனம் தீவிரம்!

தூத்துக்குடி : சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை – பொதுமக்கள் கடும் சிரம்!

ரிதன்யாவின் செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies