கேரளாவில் புகைப்பட கலைஞர்களை மணமகளின் உறவினர்கள் துரத்திச் சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூவாட்டுப்புழாவை சேர்ந்த ஜெரின், நித்தின் ஆகியோர் மாங்குளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற திருமணத்தில் புகைப்படம் எடுக்க சென்றனர். அப்போது அவர்களுக்கு தனியாக அறை ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர்கள் இருவரும் மருமகன் வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மணமகளின் குடும்பத்தினர், பணி முடிந்து காரில் சென்றுகொண்டிருந்த இருவரையும், சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகைப்பட கலைஞர்கள் புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.