டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிஷி வரும் 21-ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியதால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கெஜ்ரிவால், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அதிரடியாக அறிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சர் தேர்வு குறித்து ஆலோசனைகள் நடந்துவந்த நிலையில் கல்வித்துறை அமைச்சரான அதிஷி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், டெல்லியின் முதலமைச்சராக செப்டம்பர் 21-ஆம் தேதி அதிஷி பதவியேற்க உள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.