கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் - இபிஎஸ் குற்றச்சாட்டு!
Sep 22, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 10, 2025, 08:14 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசுதான் காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

நாமக்கல் நகரில்  அவர் பேசியதாவது :, திமுக ஆட்சியில் குடிநீரில் மலம் கலக்கப்படுவது வேதனையாக உள்ளது, குறிப்பாக வேங்கைவயல் சம்பவம், சோழவந்தான் சம்பவத்தை மக்கள் மறந்திருக்க முடியாது. குடிநீரில் கழிவை கலந்த நிகழ்வு நடைபெற்றது. அந்த சம்பவங்களில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யார் என கண்டறியப்படவில்லை மேலும் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். அதன் முதல் குற்றவாளி தற்போது உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என அந்த குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர். அதற்கான அனுமதியும் நீதிமன்றம் வழங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது. யாரை பாதுகாப்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகளில் முதல்வர் ஈடுபடுகிறார். மக்களை பாதுகாக்காத அரசாங்கமாக திமுக உள்ளது என அவ்ர் தெரிவித்தார் .

திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் போதை பொருள்கள் பழக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. இளைஞர்கள் பலர் அதற்கு அடிமையாகினர். போதை பொருள்கள் விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலின் ‘போதை பாதையில் செல்லாதீர்கள்’ என்கிறார். இந்தியாவிலேயே போதைப் பழக்கம் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சீண்டல் என தினசரி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்காத அரசாங்கமாக திமுக உள்ளது என்றும் அவர் கூறினார்.

கரூர் சம்பவத்திற்கு முன் அங்கொன்றும், இங்கொன்றுமாக போலீஸார் நிற்பர். தற்போது போலீஸார் அதிகளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு முன் எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பை வழங்கி இருந்தால் கரூரில் 41 பேர் பலியாகி இருக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சியில் எவ்வளவு போராட்டங்கள் நடைபெற்ற போது அதற்கான அனுமதியை தடையின்றி கொடுத்தோம். ஆனால் இந்த ஆட்சியில் நீதிமன்றத்துக்கு சென்று அனுமதி வாங்க வேண்டிய நிலை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிட்னி திருட்டுக்கு ஆளாகும் நிலை விசைத்தறி தொழிலாளர்களுக்கு உள்ளது. திமுக எம்எல்ஏ ஒருவரின் மருத்துவமனையில் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்டு 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அந்த மருந்தை தயாரித்த நிறுவனம் சென்னையில் உள்ளது. தமிழக சுகாதாரத் துறைக்கு இது தொடர்பாக எதுவும் தெரியவில்லை. சுகாதாரத்துறை அலட்சியத்தாலே இந்த மாதிரியான  சம்பவங்கள் நிகழ்கின்றன. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.

Tags: karur stampedetvk karur stampedekarur stampede 2025karur stampede newskarur stampede deathkarur stampede causeeps campaginnamakalDMK governmentaiadmkvijya
Share
Tweet
SendShare
Previous Post

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்துக்குள் கொட்டிய மழை நீர் – பயணிகள் அவதி!

Next Post

வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு திருமாவளவனே பொறுப்பு – அண்ணாமலை

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies