சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழாக்குளம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆண் நண்பரை தாக்கிவிட்டு பெண்ணை தூக்கிச் சென்றனர்.
இதனையடுத்து பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற கும்பல், பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.