ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
டவுசா மாவட்டம் பாண்டூகி என்ற இடத்தில் 35 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர்.
சுமார் 18 மணி நேரமாக போராடி குழந்தையை மீட்டனர். இதனையடுத்து குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.