உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் கங்கை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மாநிலத்தின் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கங்கை நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்தை நெருங்கி வருகிறது.
கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தசாஷ்வமேத் சதுக்கம் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.