விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
குகன்பாறை பகுதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் கோவிந்தராஜ் என்ற தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் குருமூர்த்தி என்பவர் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட பட்டாசு ஆலையின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக ஆலையின் போர்மேன் கபில் ராஜை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் பாலமுருகனை தேடி வருகின்றனர்.