இருபது சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் எட்டாயிரத்திற்கும் அதிகமான நிரந்தர தொழிலாளர்களும் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், நிரந்தர தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் 20 சதவீதம் போனஸ் தொகையையே, ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், சொசைட்டி தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சாலையில் அமர்ந்து என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்எல்சி நிறுவனத்தின் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தடுப்பு கட்டைகளை தகர்க்க முற்பட்டனர். அப்போது ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.