பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள கத்தியா பாபா கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு குழந்தை சப்ராவில் உள்ள சதர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த சுற்றுப்புறச் சுவரின் இடிபாடுகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் பாட்னா அருகே கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.