வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தனர். அஸ்வினும், ஜடேஜாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 339 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கிய நிலையில், 91.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 376 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களையும், ஜடேஜா 86 ரன்களையும் குவித்தனர். வங்கதேசத்தின் மெஹிதி ஹாசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.