ஆந்திரா கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணா, கண்டலேறு அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டார். பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டிய அளித்த அவர், சென்னையின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கிருஷ்ணா நதி நீர் விநாடிக்கு ஆயிரத்து 600 கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இரண்டாயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.