ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.
கிழக்கு கடற்கரை கடலோரக் பகுதியான திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றன.
மேலும், மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப முடியாமல் அவதியடைந்தனர். காற்றின் சுழற்சி காரணமாக, செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுதான் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.