புதுக்கோட்டை ரயில் நிலையத்தின் வருவாய் கடந்த 2023-24ம் நிதியாண்டில் 5 கோடியே 21 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை ரயில் நிலையம் வருவாய் அடிப்படையில் 5 கோடி ரூபாயை கடப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இதில் முன்பதிவு செய்து பயணித்தவர்கள் மூலம் 4.20 கோடி ரூபாயும், முன்பதிவில்லாமல் பயணித்தவர்கள் மூலம் ஒரு கோடி ரூபாயும் வருமானமாக கிடைத்துள்ளது.
இதன்மூலம் தென்னக ரயில்வேயின் கீழ் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களின் பட்டியலில் புதுக்கோட்டை ரயில் நிலையம் 75வது இடத்தை பிடித்துள்ளது.