திருப்பதி லட்டில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்ததாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷாமலா ராவ் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷாமலா ராவ், திருப்பதி லட்டில் பன்றி, மாட்டிறைச்சி கொழுப்பு, பாமாயில், மீண் எண்ணெய், திராட்சை விதை மற்றும் ஆளி விதை கலக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்ததாக கூறினார்.
சுத்தமான பாலில் 95 முதல் 104 என்ற வீதத்தில் கொழுப்பு உள்ள நிலையில், லட்டில் கலக்கப்பட்ட மாதிரியில் 20 என்ற வீதத்தில் கொழுப்புவீதம் இருந்ததாகவும், இதன்மூலம் அதில் கலப்படம் அதிகளவில் இருந்தது கண்டறியப்பட்டதாகவும் ஷாமலா ராவ் வேதனை தெரிவித்தார்.
இதுபோன்ற பிரச்னை எதிர்காலத்தில் வராமல் தடுக்கும் விதமாக கோயில் வளாகத்திலேயே ஆய்வுக்கூடம் அமைக்க முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.