ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிவிக்க காவல்துறை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த ரவுடியான சீசிங் ராஜா பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் இவர் தலைமறைவாக உள்ள நிலையில் தாம்பரம் மாநகர் காவல்துறை சார்பில் ராஜாவின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் சென்னை புறநகர் பகுதிகளில் ஓட்டப்பட்டுள்ளன.
சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிவிக்க வசதியாக தொடர்புகொள்ள வேண்டிய எண்களும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.