திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்பைச் சேர்த்து மகா பாவம் செய்துவிட்டதாக, முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு வேதனை தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வக பரிசோதனையில் தெரியவந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு, திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டதாக தெரிவித்தார்.
பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் இருந்ததை பல ஆண்டுகளுக்கு முன்பே கவனித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கலப்படம், தரமில்லாத நெய் குறித்து தேவஸ்தான அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் ரமண தீட்சதலு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தன்னுடைய புகாரை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும் ரமண தீட்சதலு குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் புதிய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் ரமண தீட்சதலு தெரிவித்துள்ளார்.