மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் 200 ரூபாய் கொடுப்பதாக கூறிவிட்டு 100 ரூபாய் கொடுத்ததால் மூதாட்டிகள் புலம்பிச்சென்றனர்.
அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், மதுரை தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மூதாட்டிகளுக்கு 200 ரூபாய் கொடுப்பதாக கூறிவிட்டு 100 ரூபாய் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வந்த மூதாட்டிகள் புலம்பலுடன் திரும்பிச்சென்றனர்.