மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 16ம் தேதி நடைபெற்ற நிலையில், நாடு முழுவதும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் அதில் பங்குபெற்றனர். மேலும், இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 25 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில், 650 பேர் மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
தொடர்ந்து இவர்களுக்கான மெயின் தேர்வு சென்னையில் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது.