காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பெண்கள் கல்லூரி சார்பில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலில் இருந்து உமையாள் ராமநாதன் பெண்கள் கல்லூரி வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கேரளா பாரம்பரிய ஆடை அணிந்து பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
பின்பு அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவிகள் உற்சாகத்துடன் நடத்திய நடன, நாட்டிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.