சென்னை மெட்ரோ ரயில் 3வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவடைந்தது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மாநகர் முழுவதும் 116 புள்ளி 1 கிலோமீட்டர் நீளத்திற்கு 3 வழித்தடங்களில் இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வழித்தடம் 3-இல், கிரீன்வேஸ் நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பணிகள் பிப்ரவரி 2023-இல் தொடங்கப்பட்டன.
இந்த பணியில் காவேரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டது. இந்த சுரங்கம் தோண்டும் பணி தற்போது நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.