பாடகி கெனிஷாவுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசுவது தவறு எனவும் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் யாரையும் இழுக்க வேண்டாம் எனவும் நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெயம்ரவியின் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாக உள்ள பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.இதில் கதாநாயகன் ஜெயம்ரவி, கதாநாயகி பிரியங்கா, இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கதாநாயகன் ஜெயம்ரவி பேசியதாவது : “ரசிகர்கள் கொடுக்கும் எனர்ஜியில் தான் என் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.எனது முதல் படத்தில் என்ன எனர்ஜியை கொடுதீர்களோ அதே எனர்ஜியை கடைசி படம் வரை கொடுப்பீர்கள் என்று தெரியும்.
மக்களை சந்தோஷப்படுத்துவது தான் எனது வேலை. குழந்தை போல என்னை வழி நடத்துவது ஊடகம் தான்.பிரதர் என்ற தலைப்பை நான் தான் படத்திற்கு வைத்தேன்.அக்காவுக்கும் தம்பிக்குமான அழகான திரைக்கதை தான் பிரதர் படம்” என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தாவது: ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். வாழு அல்லது வாழ விடு.என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீர்கள்.
ஏதேதோ பெயரையெல்லாம் சொல்லி ஏதேதோ செய்கிறார்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கட்டும். கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிரை காப்பாற்றிய ஒரு ஹீலர் . வருங்காலத்தில் நானும் கெனிஷாவும் சேர்ந்து ஹீலிங் சென்டரை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்.
என்னையும் கெனிஷாவையும் தவறாக பேச வேண்டாம். எங்களுடைய நோக்கம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான். அதை யாரும் கெடுக்காதீர்கள்.அதை யாராலும் கெடுக்கவும் முடியாது என ஜெயம் ரவி தெரிவித்தார்.