ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :
தமிழகத்தில் பாஜகவில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 10 கோடி உறுப்பினர்கள் இருந்தனர். இந்த ஆண்டு 11 கோடி உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மக்களிடம் கருத்துகேட்டே நடைமுறைப்படுத்த ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.
உதயநிதி துணை முதல்வராவதால் எதுவும் மாறிவிடப்போகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மது, போதை பொருட்கள் அதிகரித்துள்ளது என குற்றம் சாட்டினார்.
ஸ்டாலின் குடும்பத்தினர் ஒருவர் துணை முதலமைச்சராவது பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். விசிக சார்பில் நடக்க இருக்கும் மது ஒழிப்பு மாநாடு திருமாவளவனும், ஸ்டாலினும் சேர்ந்து நடத்தும் நாடகம் என எல்.முருகன் விமர்சனம் செய்தார்.