அமெரிக்காவில். எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்தனர்.
ராகுல் காந்தி தெரிவித்த கருத்து தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் பாஜகவினர் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவில் டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.