ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நெல் அளவை கண்டருளும் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
அரங்கநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பவித்ர உற்சவம் 9 நாட்கள் நடைபெறும்.
இந்த உற்சவம் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான நெல் அளவை கண்டருளும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.